ஒன் பிளஸின் மிட் ரேஞ் சீரிஸ்… ஏப்.1ல் இந்தியாவில் அறிமுகமாகும் OnePlus Nord CE4!

OnePlus Nord CE4 : OnePlus நிறுவனம் இந்திய சந்தையில் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள மலிவு விலை ஸ்மார்போன்கள் வரிசையில் அடுத்த மாடலான OnePlus Nord CE 4-ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதன்படி, பட்ஜெட் பிரண்டலி ஸ்மார்ட்போனான OnePlus Nord CE 4 என்ற மாடலை இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம்  1ம் தேதி அன்று மாலை 6:30 மணிக்கு அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

Read More – AMOLED டிஸ்ப்ளே…108MP ரியர் கேமரா… மலிவு விலையில் அறிமுகமான POCO X6 Neo!

OnePlus Nord CE4ன் எதிர்பார்ப்பு:

இந்திய சந்தையில் ஏற்கனவே வெளியான OnePlus Nord CE2 மற்றும் OnePlus Nord CE3 5G இன் வரிசையில் OnePlus Nord CE 4 புதிய மேம்படுத்தல் மற்றும் ஸ்டைலிங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் புகைப்படத்தை வெளியிட்ட அந்நிறுவனம், ஒன்பிளஸ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

Read More – உலகின் முதல் AI மென்பொருள் என்ஜினீயர் “Devin” அறிமுகம்… சிறப்பசங்கள் என்ன?

இந்த மொபைலில் இரண்டு பின்புற கேமராக்கள் செவ்வக வடிவில் இருப்பதால், OnePlus Nord CE 4 ஸ்மார்ட்போனானது ரூ.25,000 விலையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களுடன் கடுமையாக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 ப்ராசஸர், சிறந்த சிபியு மற்றும் ஜிபியு செயல்திறனை கொண்டுள்ளது.

கேமரா மற்றும் டிஸ்பிளே:

OnePlus Nord CE 4 மொபைலில் பின்புறத்தில் பளிங்கு போன்ற தோற்றத்துடன் இரண்டு கேமராக்கள் மற்றும் ரிங் ஃப்ளாஷ்லைட்டை கொண்டுள்ளது. முதன்மை கேமரா எலக்ட்ரானிக் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS மற்றும் EIS) ஆகிய இரண்டையும் கொண்ட 50MP சென்சாரை கொண்டிருக்கும்.

Read More – இந்தியாவில் லாஞ்ச் ஆனது iQOO Z9 5G ! விலை எவ்வளவு தெரியுமா ?

இதுபோன்று, செல்ஃபிக்களுக்கான 16MP முன் கேமராவைக் கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கைரேகை ஸ்கேனர் மற்றும் ஒரு செல்ஃபி கேமரா பன்ச்-யுடன் கூடிய AMOLED டிஸ்பிளே இருக்கலாம் என்றும் Nord CE 4 ஆனது Celadon Marble மற்றும் Dark Chrome ஆகிய இரண்டு கலர்களில் வெளிவரும் என்றும் மொபைல் தொடர்பான முழு சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் விரைவில் அந்நிறுவனம் வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment