தமிழகத்தில் குட்கா, பான் மசாலாவுக்கு ஓராண்டிற்கு தடை நீட்டிப்பு.!

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள் மீதான தடையை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின் கீழ் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். அப்போது, முதல் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை தயாரிக்கவும், விநியோகிக்கவும், விற்பனை செய்யவும் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள் மீதான தடையை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், குட்கா, பான் மசலா மற்றும் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை சேமித்து வைக்கவோ விற்பனை செய்யவோ கூடாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்