தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி ஓராண்டு நிறைவு – பிரதமர் வாழ்த்து …!

தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதையடுத்து பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள்  பெருமளவில் இந்தியாவில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்துவதை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகிறது. இன்றுடன் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து பிரதமர் மோடி அவர்கள் தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், இன்றுடன் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு  பெறுகிறது. தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு  கொடுத்த அனைவருக்கும் பாராட்டுக்கள், இந்த திட்டம் கொரோனாவுக்கு எதிரான போரில் பெரும் பலத்தை தந்தது. மேலும், பலரது வாழ்வாதாரத்தையும் உயிரையும் காக்க தடுப்பூசி வழிவகுத்தது என பிரதமர் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal