நான் காலை 10 மணிக்கு இறந்துவிட்டேன்! ஆதலால் அரை நாள் விடுப்பு தாருங்கள்!

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் அமைந்துள்ளது அந்த பள்ளி.  அப்பள்ளியில் பயின்று வரும் எட்டாம் வகுப்பு மாணவன் ஒரு அரைநாள் விடுப்பு கேட்டு, கடிதம் எழுதுகிறான். அந்த விடுமுறை கடிதத்தில் என்ன எழுதியுள்ளது என்பதை கூட கவனிக்காமல், அந்த பள்ளி முதல்வர் அவருக்கு விடுப்பு அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அந்த எட்டாம் வகுப்பு மாணவனின் பாட்டி இறந்து விட்டதாக தெரிகிறது. ஆதலால் பள்ளிக்கு அரைநாள் விடுப்பு கேட்டு பள்ளி முதல்வருக்கு அந்த மாணவன் கடிதம் எழுதுகையில், அந்த கடிதத்தில், தன் பாட்டி காலை 10 மணிக்கு இறந்துவிட்டதாக குறிப்பிடப்படுவதற்கு பதிலாக, தான் காலை 10 மணிக்கு இறந்துவிட்டேன். எனவே, எனக்கு அரை நாள் விடுப்பு தாருங்கள் என அந்த மாணவன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்.

இதனை கவனிக்காத பள்ளி முதல்வர் அந்த மாணவனுக்கு விடுப்பு வழங்கி அனுமதித்துள்ளார்.  இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.