ஒமைக்ரான் அச்சுறுத்தல்: இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்..!

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒமிக்ரான் அச்சுறுத்தலால் இரவு ஊரடங்கு பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பரவல் குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர். அப்போது, ஒமைக்ரான் அச்சுறுத்தலால் உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து மாநில அரசுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

மேலும், இரவு ஊரடங்கு பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டங்களில் புதிதாக ஏற்படும் தொற்று,  தொற்று நோய் பரவல் விகிதம் போன்றவற்றை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்யவும், வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ளும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொற்று உள்ளோரின் மாதிரிகள் உடனடியாக மேல் பகுப்பாய்வுக்காக அனுப்ப வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து தொற்று மேலும் பரவாமல் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கினார்.

author avatar
murugan