மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஆட்சியில் இருக்கும்போதே கொள்ளையடிக்கின்றனர் : மு.க ஸ்டாலின்

278

மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஆட்சியில் இருக்கும்போதே கொள்ளையடிக்கின்றனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், திமுக தேர்தலில் வெற்றி பெற்றுவிடும் என்ற பயத்தினால் தான், நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் கூட அதிமுகா உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இது போன்ற கமிஷன், கரப்ஷன் ஆட்சியை கண்டதில்லை என விமர்சித்த ஸ்டாலின், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்தே ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பதவியில் இருக்கும் வரை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர் என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.