#NZvsAUS : டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது ..!

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான சுற்று பயணம் கடந்த பிப்ரவரி 21- ம் தேதி தொடங்கியது . இந்த சுற்று பயணத்தில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் டி20 தொடரின் முதல் போட்டி கடந்த பிப்ரவரி 21- ம் தேதி வெல்லிங்டனில் நடைபெற்றது.

இந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்று இந்த டி20  தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரின் 2-வது டி20 போட்டியானது ஈடன் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ளது.

Read More : – #IPL 2024: முதல் போட்டியில் மோதும் CSK மற்றும் RCB..! இதுவரை அதிக முறை வென்ற அணி எது?

தற்போது, இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.

நியூசிலாந்து அணி வீரர்கள் :

ஃபின் ஆலன், டெவன் கான்வே (விக்கெட் கீப்பர்), வில் யங், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட், பென் சியர்ஸ்.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள் :

டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment