தகவல் தொடர்பு அலுவலகத்தை தகர்த்த வட கொரியா .!

தென் கொரியாவுடன் தொடர்புகொள்ள உதவும் கேசோங் தொடர்பு அலுவலகத்தை, வட கொரியா வெடிவைத்துத் தகர்த்துள்ளது.

வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பதற்றம் உருவாகியுள்ள நிலையில், வடகொரியாவில் இருந்து தப்பிய சிலர் தங்களுக்கு எதிராக  தென் கொரியாவில் இருந்து துண்டுப் பிரசுரங்கள் அனுப்பி  வருவதாக வடகொரியா குற்றம்  சாட்டியது.

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அவரது ஆட்சியை விமர்சிக்கும் வகையில் சிலர் தென் கொரியாவில் இருந்து ஹீலியம் பலூன்களை அனுப்புவதாக வடகொரியா கூறியது. இதனால், வடகொரிய அதிபர் தங்கை கிம் யோ ஜோங், தென் கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

மேலும், எல்லையில் உள்ள தகவல் தொடர்பு அலுவலகத்தை மூடப்போவதாகவும் கூறினார். கடந்த வாரம் வடகொரியா ,தென் கொரியாவுடனான அனைத்துத் தொடர்புகளையும் நிறுத்துவதாக அறிவித்தது. இந்நிலையில், கேசோங் பகுதியில் மூடப்பட்டு இருந்த இருநாட்டு இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் 2018-ம் ஆண்டு நிறுவப்பட்ட தொடர்பு அலுவலகத்தை வட கொரியா வெடிவைத்துத் தகர்த்துள்ளது.

author avatar
murugan