“கலக்கப்படும் சாயக்கழிவு”நோய்கள் தாக்கும் அபாயத்தில் நொய்யலாறு…!!

நொய்யலாற்றில் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதால் நோய் தாக்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.

Related image

திருப்பூர் நொய்யலாற்றில்  உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி  சாயப்பட்டறைக் கழிவுகள் கலக்கப்படுவது தொடர்வதாகவும் இதனால் கரூர் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

Image result for நொய்யல் ஆறு

இந்நிலையில் நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறைக் கழிவுகளை கலக்கக்கூடாது என்றும் ஆற்றிலுள்ள கழிவுகளை சுத்திகரிக்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற எந்த ஒரு தீர்ப்புக்கோ, அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கோ அஞ்சாமல் மீண்டும் சாயக்கழிவுகள் நொய்யல் ஆற்றில் திறந்துவிடப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

Image result for நொய்யல் ஆறு

இவ்வாறு தொடர்ந்து ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதால் கரூர் மாவட்ட பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல்  நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் ஆற்றங்கரைகளில் முளைத்திருக்கும் புற்களும் விஷத்தன்மை அடைந்து கால்நடைகளுக்கு பல்வேறு நோய்பாதிப்பு களைஏற்படுவதாகவும்  குற்றம்சாட்டுகின்றனர்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment