பீகார் தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் ஒட்டு இல்லை.!

65 வயதுக்கு மேற்பட்ட மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான வசதியை நீட்டிக்க போவதில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி வருகின்ற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், 243  தொகுதியில்  அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

சமீபத்தில், பீகார் உள்ளிட்ட இனிவரும் தேர்தல்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், பீகார் தேர்தல் மற்றும் வரவிருக்கும் பிற இடைத்தேர்தல்களிலும், 65 வயதுக்கு மேற்பட்ட மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான வசதியை நீட்டிக்க போவதில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகாரில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அதிகபட்சமாக 1,000 பேர் தான் வாக்களிக்கலாம். பீகாரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட  வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட இருக்கின்றன. 80 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், அத்தியாவசிய சேவை பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் கொரோனா பாதித்து வீடு மற்றும் பிற அமைப்புகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் தபால் வாக்கு செலுத்தலாம்  என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களும் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan