ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை – தமிழக அரசு வலியுறுத்தல் ..!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக ஏற்பட்ட ஆக்சிஜன் கடந்த மே 5-ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்த நிலையில், வரும் நாளை (ஜூலை 31-ஆம் தேதியுடன்) ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள அனுமதி முடிவடைகிறது.

இதனால்,வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதனையடுத்து, வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்த வெள்ளிக்கிழமைக்கு விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில்,வேதாந்த நிறுவனத்தின் இடைக்கால மனுவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. மேலும், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்,தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து அடுத்த வாரம் மனு விசாரணைக்கு வரும் வரை தற்போதைய நிலைப்படி ஆக்சிஜன் உற்பத்தி தொடரும் என்று நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.