இனி ‘கொரோனா’ போன்ற தொற்றுநோயைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தலாய் லாமா

இனி கொரோனா போன்ற தொற்றுநோயைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலாய் லாமா கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ‘கொரோனா போர்வீரர்களின்’ முயற்சிகளை திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா இன்று பாராட்டினார், மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற மற்றொரு தொற்றுநோயைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தற்போது, நாம் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்கிறோம், இது மிகவும் வருத்தமளிக்கிறது. இருப்பினும், எதிர்காலத்தில் இதுபோன்ற மற்றொரு நோயை தவிர்க்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உலக மனநல தினமான இன்று தனது கருத்தை கூறினார். மேலும், சுகாதாரத் துறையில் பணிபுரியும் மக்கள் காட்டும் முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் பாராட்டுவதாக அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், தினமும் காலையில், நான் மந்திரங்களை ஓதிக் கொள்கிறேன், இந்த தொற்றுநோய் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இதனை, உலகின் நன்மைக்காக, குறிப்பாக இந்தியாவின் நலனுக்காக அர்ப்பணிக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.