வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை – சத்யபிரதா சாஹு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை. அதனை யாராலும் ஹேக் செய்ய இயலாது.

தமிழகத்தில் ஏப்-6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவுகள் மே-2ம் தேதி வெளியாகவுள்ளது. இதுகுறித்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும் என்றும், வாக்கு பதிவு இயந்திரம் குறித்த சில தகவல்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மே-2ம் தேதி காலை 8:30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்  கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை. அதனை யாராலும் ஹேக் செய்ய இயலாது என்றும், அது கால்குலேட்டர் போல தான் செயல்படும். வேறு எந்த சிக்னல் கொண்டும் அதனை இயக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.