என் நேர்மையை சந்தேகிப்பவர்களை சும்மா விடமாட்டேன் – கமல்ஹாசன் அதிரடி பேச்சு..!

பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் என் நேர்மையை சந்தேகிப்பவர்களை சும்மா விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.   தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு, நேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள், தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.இதில் மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மற்றும் உயர்மட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்நேரத்தில் கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யம் எதன் காரணமாகவும் தனது பணியை நிறுத்தாது எனவும் … Read more

வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் நன்றி…! நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்…! – அமைச்சர் ஜெயக்குமார்

வாக்களித்த வாக்களிக்காத ராயபுரம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திமுக பெருபான்மையான இடங்களை பிடித்து வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் சென்னை இராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் 19,082 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐட்ரீம்  மூர்த்தி, 49,543 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் இது குறித்து … Read more

கன்னியாகுமரி இடைத்தேர்தல்.., மீண்டும் பொன். ராதாகிருஷ்ணன் தோல்வி..!

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 1,37,950 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் வெற்றி பெற்றார். எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியானது. இந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் விஜய்வசந்த் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் 5,76,037 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 4,38,087 பெற்றார். இதையடுத்து 1,37,950 … Read more

கரூரை கைப்பற்றியது திமுக….! 4 தொகுதிகளிலும் வெற்றி…!

கரூர் மாவட்டத்தில் 4 தொகுதியையும் திமுகவினர் கைப்பற்றினர்.  தமிழகத்தில் ஏப்-6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைப்பெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள்  வெளியாகியுள்ளது. அதன்படி திராவிட முன்னேற்ற கழகம் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றி கனியை பறித்துள்ளது.  இந்நிலையில், கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதியில் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சிவகாமசுந்தரி, குளித்தலை தொகுதியில் மாணிக்கம் ஆகியோர் தி.மு.க சார்பில் போட்டியிட்டனர். இதனையடுத்து, இந்த 4 தொகுதிகளிலும் திமுகவினர் … Read more

‘தமிழக மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்’ – மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி வாழ்த்து….!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில், இருந்து வருகிற நிலையில், தற்போது திமுக 158 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் … Read more

மு.க.ஸ்டாலினுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து…!

மு.க.ஸ்டாலினுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில், இருந்து வருகிற நிலையில், தற்போது திமுக 158 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது ட்வீட்டர் பக்கத்தில், மு.க.ஸ்டாலினுக்கு … Read more

திமுகவினர் வெற்றி கொண்டாட்டம்…! காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்…!

தேனாம்பேட்டையில், தடையை மீறி வெற்றி கொண்டாட்டத்தில்  ஈடுபட்டதை தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளர் முரளி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  தமிழகத்தில் ஏப்-6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இன்று காலை முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது. இதில், தற்போதைய நிலவரப்படி, திமுக 149 இடங்களிலும், அதிமுக 84 இடங்களிலும், மநீம ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து  வருகிறது. இதனையடுத்து, இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், திமுகவினர், தற்போது இருந்தே  தங்களது வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அந்த  … Read more

#BREAKING: திமுக வெற்றியை வீதிக்கு பதில் வீட்டில் கொண்டாடுங்கள்.., ஸ்டாலின் ..!

கழக வெற்றியைக் கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என் தலையாய நோக்கம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடைபெற்றது. அதில், 71.43 சதவிகித வாக்குகள் பதிவானது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும். வாக்கு என்னும் இடங்களில் குவிந்து சாதகமான முடிவுகள் வர வர ஒன்று … Read more

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை – சத்யபிரதா சாஹு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை. அதனை யாராலும் ஹேக் செய்ய இயலாது. தமிழகத்தில் ஏப்-6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவுகள் மே-2ம் தேதி வெளியாகவுள்ளது. இதுகுறித்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும் என்றும், வாக்கு பதிவு இயந்திரம் குறித்த சில தகவல்களையும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மே-2ம் தேதி காலை 8:30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை … Read more

எம்.ஜி.ஆர் பற்றி அவரது தம்பியாகிய நான் பேசுவேன்…! இரட்டை இலை இரண்டு பேர் விருந்து சாப்பிடும் இலை இல்லை…! – கமலஹாசன்

எம்.ஜி.ஆர் வைத்த இலை மரமாக வேண்டும் என்று தான் விரும்பினார். இரட்டை இலை இரண்டு பேர் வைத்து விருந்து சாப்பிட அல்ல. அதை அப்படி ஆக்கி விட்டார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், திருப்பூரில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் வைத்த இலை மரமாக வேண்டும் என்று தான் விரும்பினார். இரட்டை இலை இரண்டு பேர் வைத்து விருந்து சாப்பிட அல்ல. அதை … Read more