எந்த அரசு பேருந்தும் நிறுத்தப்படவில்லை – இபிஎஸ்-க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி.!

திமுக ஆட்சிக்கு வந்த பின் ஒரு அரசு பேருந்தையும் நிறுத்தவில்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவொரு அரசுப் பேருந்தும் நிறுத்தப்படவில்லை எனவும், எடப்பாடி பழனிசாமி வீணாக பொய் அறிக்கை பரப்பவேண்டும் எனவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நகரப்பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டிய நிலையில் அமைச்சர் சிவசங்கர் பதில் கொடுத்துள்ளார்.

மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள இரண்டு ஆண்டுகள் முறையே 1,216 கோடி மற்றும் 2,546 கோடி என கிட்டத்தட்ட 3,500கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, மற்றும் 2000 புதிய பேருந்துகள், 1500 பழைய பேருந்துகளை சீரமைக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதனை மறைத்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய் பிரச்சாரம் செய்வதாக தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், அதிமுக ஆட்சியில் தான் ஒரு ஓட்டுனர், நடத்துனர் கூட பணியில் சேர்க்கப்படவில்லை, இதனால் ஓட்டுநர், நடத்துனர் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

author avatar
Muthu Kumar