34.4 C
Chennai
Friday, June 2, 2023

இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ்…. இன்று மாபெரும் முடிசூட்டு விழா.!

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்-க்கு இன்று முடிசூட்டும் விழா நடைபெறுகிறது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பிறகு, இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று உலகத்தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அரச குடும்பத்தினர் முன்னிலையில் முடி சூட்டுகிறார். மூன்றாம் சார்லஸ் மன்னர் மற்றும் அவரது மனைவி கமிலாவின் முடிசூட்டு விழா இன்று லண்டனில் பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது.

இதில் வெளிநாட்டு தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் உட்பட கிட்டத்தட்ட 2000 விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சார்லஸின் தாயார், இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகள் மகத்தான ஆட்சி புரிந்து மாபெரும் முடிசூட்டு விழாவைக் கண்ட கடைசி மகாராணி ஆவார், இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96 வயதில் கடந்த 2022இல் இறந்தார்.