முதலமைச்சர் மட்டுமல்ல எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது-ஸ்டாலின் ..!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் கூடுவதை பார்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி மூழ்கிவிட்டார். காய்ச்சல் கண்ட முதலமைச்சர் “கிராமசபை கூட்டங்கள் நடத்த கூடாது என்று செய்திக்குறிப்பை அனுப்பியிருக்கிறார்.

ஊராட்சி மன்றங்களில் அமைக்கப்படும் “கிராம சபை” வேறு; திமுக நடத்தும் கிராம சபைக்கூட்டம் வேறு என்பது கூடவா அவருக்குத் தெரியாது..? அதிமுகவிற்கு தைரியமிருந்தால் போட்டி கூட்டம் நடத்தட்டுமே! இரு தினங்களில் கிளப்பியுள்ள எதிர்ப்பு அலை முதலமைச்சரின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

#BREAKING: கிராமசபை கூட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை – தமிழக அரசு

கிராம சபை என்ற பெயரில்தானே கூட்டம் நடத்தக் கூடாது ? இனி மக்கள் கிராம சபை என்ற பெயரில் நடத்தப்படும். 1700 நிர்வாகிகள் 16,700 கிராமங்கள்/ வார்டுகளில் நடத்தும் மக்கள் சந்திப்பும், பிரச்சாரமும் தொடரும்; முதலமைச்சர் மட்டுமல்ல எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என தெரிவித்துள்ளார்.

அரசு அனுமதி அளிக்கப்படாத நிலையில் கிராமசபை கூட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan