#BREAKING: இலங்கையில் 2 நாள்களுக்கு டீசல் இல்லை..!

இலங்கையில் எரிபொருள் நிலையங்களில் டீசல் இல்லாததால் இன்றும், நாளையும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்ததால், இலங்கை அரசு இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு பலமடங்கு அதிகரித்து உள்ளது. அதிலும் உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் 6 மணி முதல் 8 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டிருந்தது. இன்று அந்த மின் வெட்டு 10 மணி நேரம் வரை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 37,500 மெட்ரிக் டன் டீசலை தரையிறக்க முடியவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்கான டீசல் கையிருப்பில் உள்ளது.

தட்டுப்பாடின்றி பெட்ரோல் வினியோகம். சிபேட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில், இன்றும், நாளையும் டீசலை பெறமுடியாது. இலங்கையில் எரிபொருள் நிலையங்களில் டீசல் இல்லாததால் இன்றும், நாளையும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் பெட்ரோலிய கூட்டமைப்புத் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

author avatar
murugan