நம்பர் 1 நம்பர் 2 எல்லாம் தள்ளி போங்க…. இந்த வருடத்தின் தரமான படங்கள் இவைதான்.! லிஸ்ட் இதோ…

பிரபல சினிமா பத்திரிகை தளமான ஃபோர்ப்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு (2022) சிறந்த திரைப்படங்களின் பட்டியலை வெளியீட்டுள்ளது. இந்த பட்டியலில் நா தான் கேஸ் கொடு மலையாள திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது படத்தில் வசூலில் பிரமிக்க வைத்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உள்ளது.

(2022) சிறந்த இந்திய திரைப்படங்களின் லிஸ்ட்  : 

1.நா தான் கேஸ் கொடு

இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மலையாளத்தில் வெளியான திரைப்படம்  “நா தான் கேஸ் கொடு’. ஒரு மூத்த அமைச்சர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த முன்னாள் திருடனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது.

2.ஆர்.ஆர்.ஆர்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய தெலுங்கு திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரசிகர்ளுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக 1,800 கோடி வசூல் செய்தது. பல விருது பட்டியலிலும் இந்த திரைப்படம் இடம்பெற்று வருகிறது.

3.குட் பை 

இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் வெளியான திரைப்படம் குட்பை. நேசிப்பவரின் இழப்பால் துக்கத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தில் உள்ள உடன்பிறப்புகள் தங்கள் பழமைவாத தந்தையின் வீட்டில் இறுதிச் சடங்குக்காகத் திரும்பும்போது குழப்பமும் துக்கமும் மோதுகின்றன. இதனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

4.தி ஸ்விம்மேற்ஸ்

சாலி எல் ஹொசைனியின் இயக்கத்தில் வெளியான தி ஸ்விம்மர்ஸ். இளம் சிரிய அகதிப் பெண்களின் சவால்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றது.
5.கார்கி
கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், சாய்பல்லவி நடிப்பில் வெளியான கோர்ட்ரூம் நாடகமான கார்கி, குழந்தை பலாத்கார விசாரணையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்திருந்தது.
6.ரோர்சாக் (Rorschach)
இயக்குனர் நிசாம் பஷீர் இயக்கத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் ரோர்சாக். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது. தனக்கு ஏற்பட்ட பெருங்கொடுமையால் பழிவாங்கும் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், சாய் பல்லவி நடித்த “கார்கி” திரைப்படம் இடம்பெற்றுள்ளதால், அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இனிமேல் இதைப்போன்ற படங்களில் நடிங்கள் என கூறி வருகிறார்கள்.
author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment