போராட்டத்திற்கு பணிந்தது என்.எல்.சி …. உயிரிழந்தோருக்கு தலா 25லட்சம் நிவாரணத்தை அறிவித்தது…

நெய்வேலி  என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் போது கொதிகலண்  வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என என்.எல்.சி, நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது. தமிழகத்தின் நெய்வேலியில்  பழுப்பு நிலக்கரி மூலம், தமிழகம் மட்டுமின்றி  ஆந்திரா, கேரளா,புதுச்சேரி  உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், என்.எல்.சி. அனல் மின் நிலையத்தின் 2 ஆவது அலகில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொதிகலண்  வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி ஒரு நிரந்தர தொழிலாளி மற்றும் 7 ஒப்பந்த தொழிலாளர்கள் என மொத்தம்  8 தொழிலாளார்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி வெள்ளிக்கிழமை அந்த ஒரு நிரந்தர பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் நேற்று கொளிருப்பு கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்ற ஒப்பந்த தொழிலாளியும் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இந்த வேலையின் போது நிகழ்ந்த மரணம் காரணமாக உரிய இழப்பீடு வழங்கக்கோரி 2ம் அனல்மின் நிலையம் முன்பு பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்ப உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இறந்தவர்களின்  உறவினர்களுடன் நெய்வேலி என்.எல்.சி அனல்மின் நிலைய ஊழியர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்படும் எட்டாத நிலையில் அங்கு மீண்டும் இன்று காலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில்  உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதாக என்எல்சி நிர்வாகம் உறுதி அளித்தது. மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமும்  வழங்குவதாக உறுதியளித்தது. இந்த என்எல்சி இந்தியா நிர்வாகத்தின் உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

author avatar
Kaliraj