கோவை கார் வெடிப்பு : தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று என்ஐஏ விசாரிக்க மத்திய அரசு உத்தரவு.!

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கு விசரணையை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ ஏற்று நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷ் முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முபின் வீட்டில் இருந்து சுமார் 76 கிலோ வேதிப்பொருட்கள் கைப்பற்ற பட்டன.

மேலும், முபினுக்கு உதவியதாகவும், அவருடன் தொடர்பில் இருந்ததாகவும் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவத்தின் அடுத்தகட்ட விசாரணையை தேசிய புலனாய்வு முகாமையான என்ஐஏ மேற்கொள்ள  வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் பரிந்துரை கடிதம் எழுதினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை கடிதத்தை ஏற்று, தற்போது கோவை கார் வெடிப்பு வழக்கு விசாரணையை அடுத்ததாக என்ஐஏ அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment