உக்ரைன் – ரஷ்யா இடையே இன்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தை!

துருக்கியில் உக்ரைன், ரஷ்யா இடையேயான அடுத்த கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது.

கடந்த பிப்.24-ஆம் தேதி உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் உத்தரவிட்டதை தொடர்ந்து, தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தொடர் தாக்குதலில் இருநாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் தொடுத்துள்ள போரால் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு தேடி உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

உக்ரைன் – ரஷ்யா இடையே இதுவரை பெலாரசில் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு ஏதும் எட்டவில்லை. இந்த நிலையில், துருக்கியில் உக்ரைன், ரஷ்யா இடையேயான அடுத்த கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதனிடையே, துருக்கியில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்