சேலத்தில் புதிய கிரிக்கெட் மைதானம்-திறந்து வைத்தார் முதல்வர்

சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், சீனிவாசன்,தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சேலம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில், சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில்  இயற்கை எழில்கொஞ்சுகின்ற வைகையில்  மலையடிவார சூழலில்  அமைந்துள்ள இடத்தில் சர்வதேச தரத்திலான புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது.

 

Image

இந்த மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் ,முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் ,பிசிசிஐ முன்னாள் தலைவரும் ,தொழிலதிபருமாகிய சீனிவாசனும் இவ்விழாவில் கலந்துகொண்டார்.
Image
சிறப்பாக அமைக்கப்பட்ட இம்மைதானம் கிரிக்கெட் ஆர்வம் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயன் அளிக்கும்.இரண்டு ஆண்டு அயராத உழைப்பில் உருவாகியுள்ள இம்மைதானம் ஆனது சுமார் 16 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
Image
இதனுள் ஐந்து பிட்ச்சுகளை உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.திறப்பு விழாவிற்கு பின்னர் மைதானத்தில்  முதல்வர் பழனிசாமி கிரிக்கெட் விளையாடினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பந்துவீச முதல்வர் பழனிசாமி பேட்டிங் செய்து மகிழ்ந்தார்

 

author avatar
kavitha