ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் புதிய வாகனம் – இடைக்கால தடை நீக்கம்!

chennaihc

தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் 8 ஆண்டுகளுக்கு மேலான இலகுரக வாகனங்களை மாற்ற வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றறிக்கைக்கு எதிராக தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் 8 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை பயன்படுத்துவதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இலகுரக வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத்தடை நீக்கம் செய்யப்பட்டது.  அரசாணை பிறப்பித்து 10 ஆண்டுகளான நிலையில், கொரோனா சூழலை சாதகமாக்கி மனு தாக்கல் செய்துள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவித்ததை அடுத்து, இடைக்காலத்தடை நீக்கம் செய்யப்பட்டது.