புதிய பாடத்திட்டம் – வரும் 17-ம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

புதிய பாடத்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக வரும் 17-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.

பொறியியல் பாடத் திட்டங்கள் நடப்பாண்டில் மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டங்களை வகுத்துள்ளது. முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை அனைத்து மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.

மாற்றிஅமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டங்கள் வரும் 18-ம் தேதி வெளியாகவுள்ளது என்றும் இதற்கு முன்னதாக கல்வி மானியக் குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக, வரும் 17-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனையில் அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் வேல்ராஜ் பங்கேற்கின்றனர்.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக அகாடமிக் கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பொறியியல் படிப்பில் புதிய பாடத் திட்டங்களுக்கு இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment