ரேஷன் கடைகளில் புதிய திட்டம் – அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டமானது சோதனையில் இருப்பதாக  உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்  நடைபெற்ற நிலையில்,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து,செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 169 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.மேலும்,கண்கருவிழி பதிவு மூலம் ரேசன்  அட்டை தாரர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் சோதனையில் உள்ளது.இந்த சோதனை மக்கள் மத்தியில் சரியாக இருக்கும் பட்சத்தில் விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும்.எனினும்,கைரேகை பதிவுமுறையில் ரேசன் பொருட்கள் வழங்கும் நடைமுறை வழக்கம்போல் இருக்கும்”,என்று தெரிவித்தார்.