ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு மேலும் புதிய கட்டுப்பாடுகள்.!

இஸ்லாமியர்களின் முக்கிய தொழுகைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித

By gowtham | Published: Jul 08, 2020 02:21 PM

இஸ்லாமியர்களின் முக்கிய தொழுகைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் குறித்து சவுதி அரசு ஒரு அறிக்கையை வெளிட்டுள்ளது. ஹஜ் புனித பயணம் இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ள நிலையில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் மெக்கா மற்றும் மதினா நகருக்கு வருவது வழக்கம் .

ஆனால் தற்போது கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் அரேபியாவில் கொரோனா வைரஸ்பாதிப்பு அதிகரித்து வருவதால் கடந்த சில மாதங்களாக மெக்கா, காபா மசூதிகளில் தொழுகை நடத்த யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஆயிரம் பேருக்கு மட்டும் ஹஜ் புனித மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய கட்டுப்பாடான புனித நீரான ஜம்ஜம் கிணற்று நீர் கண்டிப்பாக அடைக்கப்பட்டு பிளாஸ்டிக் பாட்டில்களில் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  தொழுகை மேற்கொள்வதற்க்கு விரிப்புகளை தாங்களே கொண்டுவர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. கொரோனாவிலிருந்து மீண்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ளவர்கள் மட்டும் பக்தர்களை தேர்வு செய்யப்படுவார்கள் என சவுதி அரேபிய குறிப்பிட்டுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc