டான் படத்திலிருந்து வெளியான புதிய போஸ்டர்கள்.!

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, சூரி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி வெளியாகவள்ளது.

படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதால் படத்தின் ப்ரோமோன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் சில போஸ்டர்கள் டான் படத்திலிருந்து வெளியிடபட்டுள்ளது.

ஆம், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் ட்வீட்டர் பக்கத்தில் 4 அட்டகாசமான போஸ்டர்களை வெளியீடபட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.