மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை.! வாகனம் ஏலம் விடப்படும்.!

மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் விதிக்கப்பட்ட அபராதத்தை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ள்ளது.

மத்திய அரசு புதிய வாகன விதிகள் திருத்தத்தின்படி, தமிழக போக்குவரத்து துறை புதிய விதிமுறைகளை தமிழகத்தில் விதித்தது. அதன்படி, ஹெல்மெட், லைசன்ஸ் இல்லாமல் இருப்பது, சாலை விதிகளை மீறுவது என பல்வேறு விதிமீறலுக்கு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டன.

அதிலும், முதல் முறை தவறு செய்தால் ஒரு அபராத தொகையும், மீண்டும் அதே தவறை செய்தால் இரண்டு மடங்கு அபராதம் எனவும் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டது.

தற்போது புதியதாக ஓர் அதிரடி உத்தரவை தமிழக போக்குவரத்து துறை பிறப்பித்துள்ளது. அதன்படி, மதுபோதையில் வாகனத்தை இயக்கினால் 10 ஆயிரம் அபராதம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.

இந்த அபராதத்தை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அப்படி தவறினால், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் ஏலம் விடப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அதிரடியாய் அறிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment