இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் துவங்க கூடாது – உயர்நீதிமன்றம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் துவங்க கூடாது என  உயர்நீதிமன்றம் உத்தரவு. 

சென்னை உயர்நீதிமன்றத்தில், டி.ஆர். ரமேஷ்  என்பவர்,அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்குவதற்கும், அதற்கு செலவு செய்வதற்கும்  பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், கோவில் சொத்துக்களை உரிய நடைமுறையை பின்பற்றாமல் பயன்படுத்துவதற்கு  வேண்டும் என்றும் வழக்கு  தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் அறங்காவலர் இல்லாமல் இருக்கிறார்கள். கொளத்தூரில் இருக்கின்ற கபாலீஸ்வரர் கோவிலில் சொத்துக்கள் எதுவேயும் இல்லை. அது முதல்வரின் தொகுதி என்பதால், அங்கு அவசரமாக கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டப்பட்டது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் தான் இந்த கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது என்றும், அறநிலையத்துறை சட்டங்களை பின்பற்றி தான் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 வாரத்தில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார்.

மேலும், 8 கல்லூரிகள் தொடங்க முடிவெடுக்கப்பட்டு, கொளத்தூரில் ஒரு கல்லூரி மட்டும் தொடங்காட்டுள்ளதாக விளக்கமளித்தார். இந்த கருத்துக்களை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நான்கு கல்லூரிகளின் செயல்பாடு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும், மேலும் நான்கு புதிய கிளைகளைத் திறக்க அனுமதி கிடையாது என்றும், அறங்காவலர் இல்லாமல் நீதிமன்ற அனுமதியின்றி கூடுதல் கல்லூரிகளை தொடங்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக 3 வாரத்திற்குள் தமிழக அரசு பதில் மனு அளிக்குமாறும் தெரிவித்து, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.