கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான அனுமதி கோரியது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்பாசனத்துறைக்கு உத்தரவிட்டது. இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாது அணை தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க தங்களை சந்திக்க நேரம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது விவகாரத்தை சுமுகமாக பேசித்தீர்க்க கர்நாடகஅரசு விரும்புகிறது. காவிரி பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண கர்நாடக அரசும், மக்களும் விரும்புகிறோம். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் கடலில் கலக்கும் மேட்டூர் அணை உபரிநீரை தடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை.கர்நாடகாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…