நயன்தாராவிற்கு இரட்டை குழந்தை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

விதிமுறையை பின்பற்றி வாடகைத்தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றாரா என விளக்கம் கோரப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளதா என்பது தொடர்பாக நாளை சென்னையில் ஆலோசனை மேற்கொள்ளப்படும். மேலும், இணையதளம் மூலம் மக்கள் மருந்துகளின் இருப்புகள் குறித்து அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நயன்தாரா- விக்னேஷ் சிவன் குழந்தை பெற்ற விவகாரம் குறித்து அவர் கூறுகையில், 21-36 வயதுடையவர்களே சினைமுட்டை தானம் செய்யவேண்டும்.திருமணம் ஆகி,கணவரின் ஒப்புதல் இருக்கவேண்டும். விதிமுறையை பின்பற்றி வாடகைத்தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றாரா என விளக்கம் கோரப்படும். மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் மூலம் நயன்தாராவிடம் விளக்கம் கேட்கப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment