நாயகன்-தளபதி பிளாப்…ஆனா இப்போ? நடிப்பு அசுரன் எஸ்.ஜே. சூர்யா ஓபன் டாக்!

ஒரு படத்தின் உண்மையான வெற்றி எப்போதுமே வெளியீட்டின் போது தெரியாது என்று நடிகர் எஸ்.ஜே. சூர்யா, நாயகன் மற்றும் தளபதி படங்களை உதாரணமாக வைத்து பேசியுள்ளார்.

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில், ஒரு படம் வெளியாகும் நேரத்தில் கொண்டாடப்படாமல் இருப்பதன் உண்மையான காரணத்தையும் சிறிது நாட்களளுக்கு பிறகு, அதன் வெற்றியை கொண்டாடும் ரசிகர்களின் மனநிலை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் ஹிட் ஆனதன் மூலம், பாராட்டு மழையில் நினைந்த வருகிறார். விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்ததாக, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு படங்களிலுமே எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்பம் வெளிவதற்கு முன்னதாக, படத்தை விளம்பரப்படுத்த குமுதம் ஊடகத்திற்கு பேட்டியளித்த எஸ்.ஜே.சூர்யா, “நாயகன் மற்றும் தளபதி போன்ற படங்கள் ஆரம்பத்தில் பார்வையாளர்களால் வரவேற்கப்படாமல், தற்போது தலைமேல் வைத்து கொண்டாடுகிறார்கள்” என்பது  குறித்து பேசினார்.

மலையாள சினிமாவில் மிரட்ட போகும் எஸ்.ஜே.சூர்யா! யாருக்கு வில்லனாகிறார் தெரியுமா?

அதாவது, கமல்ஹாசனின் நாயகன் திரைப்படம் திரையரங்குகளில் பார்க்குக்கும் பொழுது, சீட்டெல்லாம் கிழிச்சு பஞ்செல்லாம் வெளிய போட்டு ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சந்தித்தது. ஆனால், இப்போது அந்த படம் ரசிகர் பட்டாளத்தை பெற்று, சிறந்த படமாக பார்க்கப்படுகிறது.

அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி முக்கிய வேடங்களில் நடித்த தளபதி திரைப்படம் ஆரம்பத்தில் பிளாப் என்று பேசினார்கள். ஆனால் இப்பொது ஒரு ஹிட் திரைப்படமாக பேசப்படுகிறது. இது தான் மக்களின் மனநிலை சினிமாவை பற்றி முதலில் புரிந்துகொள்ளாவிட்டாலும் பின்னர் புரிந்துகொள்கிறார்கள் என்று கூறினார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.