Mark Antony Review : விஷாலுக்கு தரமான கம்பேக்! ‘மார்க் ஆண்டனி’ படத்தின் திரை விமர்சனம்!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் முழு விமர்சனத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.

விமர்சனம் 

படத்தின் கதைப்படி, விஞ்ஞானியாக நடித்திருக்கும் சிரஞ்சீவி,(செல்வராகவன்) தொலைபேசிடைம் டிராவல் கருவி ஒன்றை கண்டுபிடிக்கிறார். இந்த கருவியால் தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததை மாற்றலாம் என்பதற்காக அவர் கண்டுபிடித்தார். இதனை வைத்து கதை ஆரம்பம் ஆகிறது. பிறகு, மார்க்(விஷால்)1995-ஆம் ஆண்டு சென்னையில்  ஒரு வொர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

அவர் தன்னுடைய தந்தை ஆண்டனி (விஷால்) தான் தன்னுடைய தாயார் மறைவுக்கு காரணம் என்று தனது தந்தை மறைந்து 20 ஆண்டுகள் பிறகு கோபத்தில் இருக்கிறார். பிறகு ஆண்டனி இறந்த பின் அவருடைய மகனான மார்க்கை ஆண்டனியின் நெருங்கிய நண்பன் ஜாக்கி பாண்டியன்(எஸ்.ஜே.சூர்யா) பாசமாக வளர்த்து வருகிறார்.

அதன்பிறகு தன்னுடைய தந்தையை கொன்றுவிட்டு மிகப்பெரிய டான் ஆகா நாம் மாறிவிடலாம் என ஜாக்கி பாண்டியன் மகன் மதன் பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா)  திட்டமிடுகிறார். இதனை வைத்து முதல் பாதி நகர்கிறது. அதன்பிறகு அமைதியாக வாழ்ந்து வரும் மார்க்குக்கு சிரஞ்சீவி தயார் செய்து வைத்திருந்த தொலைபேசி டைம் டிராவல் கருவி  கிடைக்கிறது.

இதனை வைத்து நடந்த அனைத்தையும் மாற்றலாம் என எண்ணி மார்க் அதில் இறங்கும்போது தன்னுடைய தந்தை மார்க் ஆண்டனி மிகவும் நல்லவர் என்பதை அறிந்து கொள்கிறான். அவர் மீது ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கியது தன்னை வளர்த்து வரும் ஜாக்கி பாண்டியன் தான் என்பது தெரிய வருகிறது. இதற்கு பிறகு நடந்தது என்ன என்பது தான் படத்தின் கதை. டைம் டிராவலை வைத்து பின், செல்லும் காட்சிகளையும் நடப்பு கால காட்சிகளையும் எந்தவித சொதப்பலும் இல்லாமல், இயக்குனர் சரியாக செய்திருக்கிறார்.

படத்தில் இரண்டு வேடங்களிலும் நடித்திருந்த விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவருமே அருமையாக நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அட்டகாசமான பாடல்களையும், தூக்கலான பின்னணி இசையையும் கொடுத்திருந்தார். சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுனிலும், சில்க் சுமிதாவாக நடித்த பெண்ணும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.  மொத்தத்தில் சொல்ல போனால் படம் கண்டிப்பாக அனைவர்க்கும் பிடிக்கும்.

நீங்கள் திரையரங்குக்கு சென்று கூட இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். குறை சொல்லும் அளவிற்கு படத்தில் எந்த ஒரு விஷயமும் இல்லை. ஏற்கனவே, விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான பல படங்கள் அவருக்கு தோல்வியை கொடுக்க இந்த மார்க் ஆண்டனி திரைப்படம் அவருக்கு சூப்பரான கம்பேக்கை கொடுத்துள்ளது.