தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் – பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

அக்டோபர் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து வழங்குவதற்காக நடப்பு ஆண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 2023 முதல் இக்கல்வியாண்டிற்கான உயர்கல்வி நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 2023 அக்டோபர் மாதத்தில்,
பொது சட்ட நுழைவுத் தேர்வு (CLAT-Common Law Admission Test) மற்றும் அனைத்திந்திய சட்ட நுழைவுத் தேர்வு (AILET – All India Law Entrance Test), தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் வடிவமைப்பு திறன் தேர்வு (NID – National Institute of Design – Design Aptitude Test ) மற்றும் வடிவமைப்பிற்கான இளங்கலை பொது நுழைவுத் தேர்வு (UCEED. Undergraduate Common Entrance Examination for Design ஆகிய தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியின் விவரங்கள், வகுப்பு வாரியான கட்டண விவரங்கள் (Communal wise fee details), தகுதி வரம்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ இணைய முகவரி ஆகியவை இணைப்பு 1 இல் இணைக்கப்பட்டுள்ளன.

எனவே, மேற்குறிப்பிட்டுள்ள நுழைவுத் தேர்வுகளுக்கான தகவல்களை அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் வாயிலாக 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறியச் செய்து விருப்பமுள்ள மாணவர்களை விண்ணப்பிக்க செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.