நாங்குநேரி சம்பவம் : 6 பள்ளி மாணவர்களை அடுத்து மேலும் ஒருவர் கைது.!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் முனியாண்டி என்பவரது மகன் சின்னதுரை (வயது 17) வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் சின்னதுரை படிக்கும் பள்ளியில் பயிலும் சில சக மாணவர்கள் அவர் மீது சாதிய ரீதியாக பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார். இந்த விவரம் அறிந்த ஆசிரியர் சாதிய ரீதியில் பாகுபாடு காட்டிய சக மாணவர்களை கண்டித்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்த அந்த குறிப்பிட்ட மாணவர்கள் சின்னதுரையை பழிவாங்க எண்ணி மாணவன் வீட்டுக்கே சென்று மாணவனை அறிவாளால் பல இடங்களில் வெட்டி உள்ளனர். அதனை தடுக்க சென்ற அவரது தங்கையையும் அந்த கும்பல் வெட்டி உள்ளது இருவரும் அரிவாள் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சாதிய ரீதியிலான கொடூர தாக்குதலில் ஈடுபட்ட 6 பள்ளி மாணவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 18வயதுக்கு கீழ் உள்ளவர்கள். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாங்குநேரி நம்பி நகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் எனும் இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.