நடராஜர் சிலை கீழடியில் கண்டெடுப்பா? காற்றாய் பரவும் தகவல்

கீழடியில் நடராஜர் சிலை கண்டெடுத்ததாக  வலைதளங்களில்  காணொலி ஒன்று உலா வருகின்றன.இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வுகல் மணலூர், கொந்தகை அகரம் ஆகிய இடங்களில் பிப்., 19ந்தேதி முதல் தொடர்ந்து அகழாய்வு பணிகள் ஆனது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு குழிகளில்  பானைகள், வடிகால் அமைப்பு, விலங்கின எலும்புகள் என ஏற்கனவேன கண்டுபிடிக்க பட்டன.ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில்  நடராஜர் சிலை ஆய்வு நடைபெறும் கீழடியில் கண்டெடுக்கப்பட்டதாக  வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது.இது குறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவது போல கீழடியில் நடராஜர் சிலை எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.இது தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் தெரிவித்த அவர் கொரோனா பரவல் காரணமாக கடந்த  மார்ச் மாதம் முதல் தற்போது வரை பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி கிடையது தொல்லியல் துறை நியமித்த பணியாளர்கள் தவிர  வேறு யாரும் குழிக்குள் இறங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.மேலும் அவர் போலியான வீடியோக்களை இது போல் யாரும் பதிவிட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

author avatar
kavitha