இலவச வீட்டுமனை பட்டா மோசடி.! நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது.!

இலவச வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக கூறி 8 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது. 

2004 ஆண்டு ஏற்பட்ட இயற்கை பேரழிவான சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடு இழந்தவர்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கியது . அப்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு எனும் கிராமத்தில் வசிக்கும் 10 ஆயிரம் குடும்பங்களில் பெரும்பாலானோருக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கியது.

சுனாமி வீடு : இதில் இலவச வீட்டுமனை பெறாத மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க தொடர் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். அப்போது அப்பகுதி நாம் தமிழர் கட்சி பிரமுகர் செண்பக சாமி என்பவர் வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக கூறி அங்குள்ள40 பேரிடம் தலா 20 ஆயிரம் என 8 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்ற காவல் : காசு வாங்கி அதற்கு போலி பட்டாக்களை அவர்களுக்கு வழங்கியதாக தெரிகிறது. இதனை அறிந்த கிராமத்து மக்கள் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரை அடுத்து செண்பகசாமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அங்கு அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment