இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி தற்போது திரையுலகை கலக்கி வருகிறார் என்றே கூறலாம். 20 வயதான இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் பல பெரிய படங்களில் நடித்து கலக்கி வருகிறார். சமீபத்தில் நாகசைதன்யா நடிப்பில் வெளியான “கஸ்டடி” படத்தில் கூட அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் கடந்த மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி ஷெட்டி தனது வருங்களா கணவர் குறித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய நடிகை கீர்த்தி ஷெட்டி ” என்னுடைய வருங்கால கணவர் அப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்கவேண்டும் என்று எல்லாம் நான் யோசிப்பது இல்லை. அழகாக எல்லாம் இருக்கவேண்டாம். பாசமாக இருந்தாலே எனக்கு போதும்.

பெரிய வசதியானவராக இருக்க வேண்டும் என்பது எல்லாம் இல்லை. நேர்மையான நல்ல மனம் கொண்டவராக இருந்தாலே போதும்” என மனம் திறந்து பேசியுள்ளார். மேலும் நடிகை கீர்த்தி ஷெட்டி கஸ்டடி படத்தை தொடர்ந்து அடுத்ததாக “அஜயந்தே ரண்டம் மோஷனம்” படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.