சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் முதல் விக்கெட் குறித்த கேள்விக்கு, பீட்டர்சன் பதில் அளித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தி வந்த தோனி, ஜாகீர் கான் காயம் அடைந்ததை அடுத்து பந்து வீசினார்.
அவர் வீசிய பந்தில் இங்கிலாந்து அணி வீரர் கெவின் பீட்டர்சன் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தபின், பீட்டர்சன் மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்) செய்யுமாறு கேட்ட பிறகு, பந்து பேட்டில் படாதது உறுதியானதால் பீட்டர்சன் அவுட் ஆகவில்லை என நடுவர் அறிவித்தார்.
இதனையடுத்து, சர்வதே போட்டிகளில் தோனி எடுத்த முதல் விக்கெட் நீங்கள்தானா.? என நெட்டிசன்கள் பலரும் கெவின் பீட்டர்சனிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இந்நிலையில், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, தோனி எடுத்த முதல் விக்கெட் தான் இல்லை என உறுதிப்படுத்தினார்.
The evidence is CLEAR! I was NOT Dhoni’s first Test wicket.
Nice ball though, MS! 😂😂😂Thanks for sending this through, @SkyCricket 🙏🏽 pic.twitter.com/XFxJOZG4me
— Kevin Pietersen🦏 (@KP24) May 16, 2023