என்னுடைய முதல் கிளப் கேப்டன் விஷ்ணு விஷால்.!

இந்திய  கிரிக்கெட் வீரர் அஸ்வின் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் வீடியோ கால் மூலம் பேசியுள்ளனர்.

இந்த கிரிக்கெட்  சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது ட்வீட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் வீடியோ காலில் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ள்ளார், அந்த வீடியோவில் அஸ்வின் கூறியது நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை நானும் விஷாலும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி யுள்ளோம், என்னுடைய முதல் கிளப் கேப்டன் விஷ்ணு விஷால் தான் அவர் ஒரு படம் தோல்வியடைந்தாலும் அடுத்த வெற்றியை கொடுக்க நினைப்பர் என்றும் கூறியுள்ளார்.

நான் விஷ்ணு விஷால் படம் வெளியாகும் பொழுது நம்ம கூட கிரிக்கெட் அடியவரின் படம் அதனால் நான் தியேட்டருக்கு சென்று படத்தை பார்ப்பேன் என்றும் கூறியுள்ளார், மேலும் விஷ்ணு விஷால் கூறியது 4 மேட்ச் ரன் அடிக்கவில்லை என்றாலும் 5 வது மேட்ச்சில் ரன் குவிக்க நினைப்பேன் என்றும் கூறிஉள்ளார்.மேலும்  இந்த முழு வீடியோ நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.