எனது தந்தை மீண்டும் அரசியலுக்கு வர மாட்டார் : சார்மிஷ்டா முகர்ஜி ..!

 முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீண்டும் அரசியலுக்கு வர மாட்டார் என அவரது மகள் சார்மிஷ்டா முகர்ஜி தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். விழாவில் பிரணாப் கலந்துக் கொண்டு பேசியது தேசிய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள்  சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் பரபரப்பு கருத்தை தெரிவித்து உள்ளார்.
, “தற்போதைய அரசியல் நிலவரத்தை பார்க்கும்போது, 2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைப்பது சாத்தியம் இல்லை. அவ்வாறு நடந்தால் மற்ற கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் ஆதரவை கொடுக்கமாட்டார்கள்.
அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் பிரணாப் முகர்ஜியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு உள்ளது. அவர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவராக இருப்பார்“ என்றார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பிரணாப்பின் மகள் சார்மிஷ்டா, நாட்டின் ஜனாதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற எனது தந்தை மீண்டும் தீவிர அரசியலுக்கு வர மாட்டார் என தெரிவித்துள்ளார்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment