ரம்ஜான் பண்டிகைக்கு முன் முஸ்லிம்கள் நோன்பு கடைபிடிக்கும் முறைகள்!

ரம்ஜான் பண்டிகைக்கு முன் முஸ்லிம்கள் நோன்பு கடைபிடிக்கும் முறைகள்.

ஒவ்வொரு வருடமும், முஸ்லிம்கள் தங்களது ரம்ஜான் பண்டிகையை மிகவும் கோலாகலமாக கொண்டாடுவதுண்டு. இஸ்லாமியர்கள் ஒன்பதாம் மாதத்தில், இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்த மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள், நோன்பை அனுசரிக்கின்றனர்.

இசுலாமிய நம்பிக்கையின்படி முகமதுநபி முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுசரிப்பதாக கூறப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பானது, இசுலாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நோன்பானது வயது வந்த இசுலாமியர்களுக்கு கட்டாயமான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த நோன்பு நாட்களில், இஸ்லாமியர்கள், விடியற்காலையிலிருந்து சூரிய மறைவு வரை உண்ணாநோன்பு இருக்கும் போது, முஸ்லிம்கள் உணவு உட்கொள்ளல், நீர் மற்றும் திரவங்களை அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் பாலியல் உறவுகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறார்கள். நோன்பு தொடங்குவதற்கு முன்னதாக எடுக்கப்படும் உணவானது ஸஹர் எனவும் நோன்பு முடிந்த பின் எடுத்துக் கொள்ளப்படும் உணவானது இப்தார் எனவும் கூறுகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.