கரூரில் 108 ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

கரூரில் 108 ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு கொரோன தொற்று உறுதி.

இந்தியா முழுவதும் கொரோனா  வைரசின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் வெளியில் வந்து தங்களது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டம் கடம்பன்குறிச்சி சேர்ந்த 25 வயதான அரவிந்த், சென்னை ராயபுரத்தில் 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இதனையடுத்து, கரூரிற்கு வந்த இவரையும் இவரது குடும்பத்தினரையும் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், இவர் தனிமையில்  இருக்காமல், கரூரிலேயே பணியாற்ற உயரதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். இதனையடுத்து, அதிகாரிகள் அனுமதி அளித்ததை தொடர்ந்து, 27ஆம் தேதி வெள்ளியணை பகுதியில் இயக்கப்படும் 108 ஆம்புலன்ஸில் உதவியாளர் பணியில் சேர்ந்தார்.

இந்நிலையில், இவரை  பரிசோதித்த போது, இவருக்கு தொற்று உறுதியானதையடுத்து, இவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், பொது இடங்களுக்கு  சென்றது, மற்றவர்களுக்கு தொற்றை பரப்பியது என தொற்று பாதித்த மருத்துவ உதவியாளர் மற்றும் அவருக்கு 108 ஆம்புலன்சில் பணி வழங்கிய மண்டல மேலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.