சாலையில் எச்சில் துப்பியவருக்கு வினோத தண்டனை வழங்கிய சூரத் நகராட்சி

சாலையில் எச்சில் துப்பியவருக்கு வினோத தண்டனை வழங்கியுள்ளது சூரத் நகராட்சி.

சூரத்தில் சாலைகள் மற்றும் பொது இடங்களில் சிறுநீர் கழித்தல் மற்றும் எச்சில் துப்புதல் போன்ற அசுத்த  செயல்களில் ஈடுபடுவோருக்கு சூரத்  நகராட்சி வினோதமான தண்டனைகளை வழங்கி வருகிறது. அவர்களுக்கு மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இடமில்லாமல் அபராதம் விதித்தல் மற்றும் வினோத தண்டனைகளை வழங்குகிறது. இதனால் பொதுமக்கள் சற்று விதிகளை கடைபிடிக்க தொடங்கியுள்ளனர் .

கடந்த இரு நாட்களாக  சமூக வலைதளங்களில் இளைஞர் ஒருவர் தோப்புக்கரணம் போடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்று பார்க்கையில் சூரத் நகரில் பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் எச்சில் துப்பியுள்ளார். இதனை கண்ட  நகராட்சி அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்து அபராதம் விதித்துள்ளனர். ஆனால் அவரிடம்  போதுமான பணமில்லை என்னை மன்னித்துவிடுங்கள் என்று கேட்டிருக்கிறார், இதனை ஏற்றுக் கொள்ளாத அந்த அதிகாரிகள் தோப்புக்கரணம் போடும் படி சொல்லி  இந்த தண்டனையை வழங்கியுள்ளனர்.

இப்படி சில நாட்களுக்கு முன்னர் சாலையை அசுத்தம் செய்த நபருக்கு நகராட்சி நிர்வாகம் சாலை முழுவதையும் சுத்தம் செய்யும் தண்டனையை வழங்கியது .பணம் செலுத்த முடியவில்லை என்றால்  அந்த தொகையானது அவர்களுக்கு பெயரில் வரவு வைக்கப்படும்.

author avatar
Dinasuvadu desk