முதல் போட்டி ராசியே இல்லை! மோசமான சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!

Mumbai Indians : ஐபிஎல் சீசனின் முதல் போட்டிகளில் அதிகமுறை தோல்வி அடைந்த அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ்  படைத்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் அஹமதாபாத்தில் நடைபெற்றது. இந்த சீசனில் மும்பை அணிக்கும் குஜராத் அணிக்கும் இந்த போட்டி தான் முதல் போட்டி. எனவே, இந்த முதல் போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில்  6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து. இதனால் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை அணி ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைவது ஒன்னும் புதிதான விஷயம் இல்லை. ஏனென்றால், கடந்த 12-ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்றதே இல்லை. 2013 முதல் தற்போது வரை முதல் போட்டி என்றாலே மும்பை அணி முதல் போட்டியில் வெல்ல திணறி வருகிறது.

கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை விளையாடியது. அந்த போட்டியில் தான் சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. அந்த போட்டியை தொடர்ந்து கடந்த 12-ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் வெற்றிபெறவில்லை. இதன் மூலம் முதல் போட்டியில் அதிகமுறை தோல்வியை கண்ட அணி என்ற மோசமான சாதனையும் மும்பை படைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டி தோல்வி விவரம் 

  • 2013: (MIvsRCB) பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோல்வி.
  • 2014: (MIvsKKR) கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோல்வி.
  • 2015 : (MIvsKKR) கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 7  விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வீழ்ந்தது.
  • 2016 : (MIvsRPS) புனே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வீழ்ந்தது.
  • 2017 : (MIvsRPS) புனே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வீழ்ந்தது.
  • 2018 : (MIvsCSK) இந்த போட்டியில் மும்பை அணியை சென்னை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
  • 2019 : (MIvsDC)  டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
  • 2020 : (MIvsCSK) இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.
  • 2021 : (MIvsRCB) இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை பெங்களூர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
  • 2022 : (MIvsDC) டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி  4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
  • 2023 : (MIvsRCB) இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
  • 2024 : (MIvsRCB ) இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது.

 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.