#Breaking:உக்ரைனில் இருந்து வருபவர்களிடம் இது இல்லையென்றால்;பரிசோதனை – மும்பை விமான நிலையம் அறிவிப்பு

மும்பை:உக்ரைனில் இருந்து மும்பை வருபவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்காவிடில்,RTPCR பரிசோதனை செய்யப்படும் என மும்பை விமான நிலையம் அறிவிப்பு.

உக்ரைன் -ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனில் இருந்து சாலை வழியாக ருமேனியாவுக்கு இந்திய மாணவர்கள் மற்றும் மக்களை வரவழைத்து அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்தது.இதனைத் தொடர்ந்து, உக்ரைனில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர ருமேனியாவில் உள்ள புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் AI-1943 சிறப்பு விமானம் சென்றடைந்தது.

தற்போது,உக்ரைனில் இருந்து தமிழர்கள் உட்பட 470 இந்தியர்கள் திரும்பி நாட்டிற்கு வருகின்றனர்.இந்நிலையில்,உக்ரைனில் இருந்து மும்பை வருவோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்காவிடில்,அவர்களுக்கு RTPCR பரிசோதனை செய்யப்படும் என்று மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் இன்டர்நேஷனல் விமான நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும்,RT-PCR கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை விமான நிலையமே ஏற்கும் எனவும் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் இன்டர்நேஷனல் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும்,எந்தவொரு பயணியும் கொரோனா நேர்மறை(பாசிடிவ்) சோதனை செய்யப்பட்டால்,அவர்கள் அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட நெறிமுறைகளின்படி மருத்துவ ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் எனவும்,மேலும்,கொரோனா நெகடிவ் என வந்தால் மட்டுமே விமான நிலையத்தை விட்டு பயணிகள் வெளியேற அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.