நீலகிரியில் மலை ரயில் தடம் புரண்டு விபத்து!

மலை ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு.

நீலகிரி: குன்னுர் – மேட்டுப்பாளையம் இடையே ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.  குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட மலை ரயிலில், கடைசி பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகியதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

மலை ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு சூழலால் ஏற்பட்டுள்ளது. பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மலை ரயில் விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தண்டவாளத்தில் இறங்கிய பெட்டியினை சரி செய்யும் பணி நடைபெறுவதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்