AI கேமரா…18 நிமிடங்களில் 100% சார்ஜ்…விற்பனைக்கு வந்தது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ.!

Motorola Edge 50 Pro 5G: அசத்தலான சலுகைகளுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கிறது.

மோட்டோரோலா நிறுவனத்தின் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்திய சந்தையில்விற்பனைக்கு வந்துள்ளது. இதனை, flipkart மற்றும் motorola ஆகிய இணையதள வழியாக பெற்று கொள்ளலாம்.

Motorola Edge 50 Pro 5G
Motorola Edge 50 Pro 5G FILE IMAGE

விலை மற்றும் சலுகை

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.31,999க்கு கிடைக்கிறது. மற்றொன்று 12 ஜிபிரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.35,999க்கு கிடைக்கிறது. இந்த மொபைல் போனை HDFC வங்கி கார்ட் மூலம் பணம் செலுத்தினால் ரூ.2000 சலுகை கிடைக்கும்.

Motorola Edge 50 Pro
Motorola Edge 50 Pro FILE IMAGE
இது தவிர, HDFC வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் ரூ.2200 வரை தள்ளுபடி பெறலாம். அது மட்டும் இல்லாமல் இன்றைய தினம் வாங்கினால், சிறப்புத் தள்ளுபடியாக ரூ.2000 தள்ளுபடி செய்து ரூ.27,999க்கு கிடைக்கிறது.

இப்படி மலிவான விலையில், சத்தலான சலுகைகளில் கிடைக்கவிருக்கும் இந்த ஸ்மார்ட் போன் முதல் AI கேமரா போன் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

Motorola Edge 50 Pro 5G 1
Motorola Edge 50 Pro 5G FILE IMAGE
இந்த ஸ்மார்ட் போன், மூன்லைட் பேர்ல் (Moonlight Pearl), லக்ஸ் லாவெண்டர்( Luxe Lavender) மற்றும் பிளாக் பியூட்டி (Black Beauty) என மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

சிறப்பம்சங்கள்

  • 6.7 இன்ச்1.5K  P-OLED கர்வ்டு டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளது.
  • 144 Hz ரிப்ரெஷ் ரேட், HDR 10+ சப்போர்ட் என குவால்காம் டைமென்சிட்டி செயலியை விட 4என்எம் அதிகமான ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
  • மேலும், இது Adreno 720 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஈர்க்கக்கூடிய கிராபிக்ஸ் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் கேமிங் விளையாடுவதற்கும், மல்டிமீடியா பணிகளை மேற்கொள்ள எதுவாக அதிவேக அனுபவத்தை வழங்குகிறது.
  • ஆண்ட்ராய்டு 14 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட் போன், நீண்ட கால பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மூன்று முக்கிய OS உதையுடன் நான்கு வருட பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்கிறது.
  • மேலும், SGS கண் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதன் மூலம் நீண்ட நேரம் போனை உபயோகப்படுத்தினாலும் கூட, கண் சோர்வைக் குறைக்க உதவுகிறது.
  • 4,500 mAh  பேட்டரி உடன் இது 50W வயர்லெஸ் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் கொண்டுள்ளது. இதன் மூலம் வெறும் 18 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
  • உலகின் முதல் AI-இயங்கும் ப்ரோ-கிரேடு கேமரா உள்ளது. 13 MP அல்ட்ராவைடு மற்றும் மேக்ரோ கேமரா, 30X ஹைப்ரிட் ஜூம் மற்றும் OIS உடன் 10 MP டெலிஃபோட்டோ கேமராக்கள் உள்ளன.
  • ஒன்று 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றொன்று 12ஜிபிரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது.
author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.