டீ போட போறீங்களா? அப்போ இந்த ஸ்டைல போடுங்க.. டேஸ்டா இருக்கும்..

Special tea-நீங்கள் போடும்  டீயின் மணம் , நிறம்  ,சுவை எல்லாம் சரியாக  வர இது போல செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  • பால் =2 கப்
  • தண்ணீர் =2, 1/2 கப்
  • டீ தூள் =3  ஸ்பூன்
  • சர்க்கரை =தேவையான அளவு
  • இஞ்சி = 1 துண்டு
  • ஏலக்காய் =4

செய்முறை:

இரண்டரை கப்  தண்ணீரை கொதிக்க வைக்கவும்.அதில்  இஞ்சி மற்றும் ஏலக்காயை நன்கு தட்டி கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளவும். இஞ்சியையும் ஏலக்காயையும் மிக்ஸியில் அரைத்து சேர்க்கக்கூடாது.

இப்போது இஞ்சி கொதித்த உடன்  மூன்று ஸ்பூன்  டீ தூள் சேர்க்கவும், டீ தூள் நிறம் இறங்கி நன்கு கொதித்த பிறகு ,தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் .பால் சேர்த்த பின் சர்க்கரை சேர்த்தால் சுவை நன்றாக இருக்காது .

இப்போது பாலை தனியாக காயவைத்து, டீயுடன் சேர்த்து கலந்து விடவும். இவ்வாறு ஒரு நிமிடத்திற்கு கொதிக்க வைக்கவும் ,கொதிக்கும் போது கரண்டியால் கலந்துவிட வேண்டும் அப்போதுதான் அதன் நிறம் ஒன்று போல கிடைக்கும். இப்போது ஏலக்காய் இஞ்சி நறுமணத்துடன் பர்ஃபெக்ட்டான டீ தயார்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.